ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி.. ஓட்டிகிட்டு உடும்புக்காரி.. நடிகை பிரியா கில் தற்போது எப்படி இருக்கார் பாருங்க..! Trending News

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் நடிப்பில் வெளி வந்த ரெட் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடித்த பிரியா கில்லை ஞாபகம் இருக்கிறதா.

இதையும் படிங்க: என் கணவர் எப்போது இதற்கு அழைத்தாலும்.. ஓகே.. ஆனால்.. அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

நடிகை பிரியா கில்..

நடிகை பிரியா கில் ஆரம்ப காலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து பாலிவுட் படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட இவர் 1996-ஆம் ஆண்டு வெளி வந்த தேரி மேரா சப்னா படத்தின் மூலம் பாலிவுட் திரை உலகை அறிமுகம் ஆனார்.

இந்தப் படத்தில் பச்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்திரச்சூர் சிங் மற்றும் அர்ஷத் வர்சி உள்ளிட்டோர் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இவர் அகத்தியன் இயக்கிய சிர்ஃப் தும் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றதால் அதில் நடித்த பிரியா கில் மலையாளத்தில் மம்முட்டியோடு ஜோடி போட்டு நடிக்க கூடிய வாய்ப்பு தேடி வந்தது.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி இப்ப எப்படி இருக்காங்க..

இதனை அடுத்துத்தான் தமிழில் அஜித் நடிப்பில் வெளி வந்த ரெட் படத்தில் கதாநாயகியாக நடிக்கக்கூடிய வாய்ப்பை பெற்று ஒரு படத்தில் நடித்திருந்தாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து எதிர்பார்த்த அளவு தமிழ் திரைப்படங்கள் இவருக்கு அமையவில்லை. மிக நீண்ட இடைவெளியை எடுத்துக் கொண்ட இவர் 2006-ஆம் ஆண்டு வெளி வந்த பைரவி திரைப்படத்தில் நடித்தது தான் இவரது கடைசி திரைப்படமாக உள்ளது என்று சொல்லலாம்.


லேட்டஸ்ட் போட்டோ..

திரைப்பட வாய்ப்புகள் பெரிதளவு கிடைக்காத காலகட்டத்தில் 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு டென்மார்க்கில் செட்டில் ஆகிவிட்ட இவர் தற்போது குடும்பத்தோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மேலும் மாடலிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் இவர் தற்போதைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருப்பதை அடுத்து இவரது புகைப்படங்களை அதிகளவு ரசிகர்கள் பார்த்து வருவதோடு ரெட் பட நாயகி இப்படி இருக்காங்க என்ற விமர்சனத்தையும் முன் வைத்திருக்கிறார்கள்.

அத்தோடு இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யப்பட்டு திரைப்பட நாயகியின் லேட்டஸ்ட் போட்டோவை பற்றி அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க: “வாடி என் தர்ம பத்தினி..” ஒரு கையில் சரக்கு.. மறுகையில் கன்றாவி.. இணையத்தை தெறிக்க விட்ட நித்யா மேனன்..!

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் ரெட் படத்தில் பார்த்த ஒல்லிக்குச்சி உடம்புக்காரி ஒட்டிக்கிட்ட உடும்புக்காரி நடிகை பிரியா கிர் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.