அப்படியே Xerox எடுத்த மாதிரி இருக்கும் தலைவாசல் விஜயின் மகன்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..! Trending News

பொதுவாக சிலரை பார்க்கும்போது, அப்பாவுக்கு தப்பாத புள்ள, அப்பா மாதிரியே புள்ள என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. அப்பாவை போலவே குணம் கொண்டவர்களாக மகன்கள் சிலர் இருப்பார்கள். அப்பாவை போலவே மகன் தோற்றத்தில் இருப்பார்கள்.

அந்த வகையில் சில நடிகர்களின் மகன்கள் சில நடிகைகளின் மகள்கள், அவர்களை போலவே தோற்றத்தில் இருப்பதுண்டு, ஆனால், அப்படி ஒரு சிலருக்கு மட்டுமே அமைகிறது, அப்பாவை போலவே அச்சு அசலாக இருக்கின்றனர்.

தலைவாசல் விஜய்

நடிகர் தலைவாசல் விஜய், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகர். எந்த கேரக்டர் என்றாலும், மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகராக, பல படங்களில் அவர் தன்னை நிரூபித்திருக்கிறார்.

நடிகர்கள் நாசர், ரகுவரன் வரிசையில் நடிகர் தலைவாசல் விஜயும் ஒரு மிகச் சிறந்த நடிகர்.

உன்னை நினைத்து படத்தில்…

தலைவாசல், காதல் கோட்டை, துள்ளுவதோ இளமை, கோகுலத்தில் சீதை, சண்டக்கோழி, காதலுக்கு மரியாதை, உன்னை நினைத்து என பல படங்களில் தனது நடிப்பாற்றலை திறம்பட வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக உன்னை நினைத்து, கோகுலத்தில் சீதை படத்தில் இவரது நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் பலத்த பாராட்டை பெற்றது.

தலைவாசல் விஜயின் நடிப்புத் திறமையை உணர்ந்த இயக்குனர்கள், அவருக்கான கேரக்டரை தேடி வந்து அவர்தான் நடிக்க வேண்டும் என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: “என் திருமணம் நின்னு போச்சு.. ஆனால்.. அதன் பிறகு..” ராஷ்மிகா மந்தனா சொல்வதை கேட்டீங்களா..?

அழுத்தமான நடிப்பு

படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் தலைவாசல் விஜயின் நடிப்பு என்பது தனிப்பட்ட முறையில் ரசிகர்களின் மனதில் நிற்கும் படியான ஒரு அழுத்தமான நடிப்பை அவர் வழங்குவார் என்பதில் சந்தேகமே இல்லை.

துவக்கத்தில் சில படங்களில், நான்கைந்து முக்கிய நடிகர்களில் ஒருவராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துக் கொண்டிருந்த தலைவாசல் விஜய், சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் அப்பா, அண்ணன் போன்ற கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கன்னியாகுமரியில் பிறந்தவர்

கடந்த 1962 ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் பிறந்தவர் ஏ ஆர் விஜயகுமார். அவரது உண்மையான பெயர் ஏ ஆர் விஜயகுமார். இவர் கடந்த 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தலைவாசல் என்ற படம் மூலம் தான் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பிறகு தான் இவரது பெயர் தலைவாசல் விஜய் என்று அடையாளமாக மாறியது. இந்த படத்தை தொடர்ந்து இன்று வரை பல படங்களில் நடித்து வருகிறார் தலைவாசல் விஜய்.

இதையும் படியுங்கள்: சொத சொதன்னு நனைந்த நீச்சல் உடையில்.. தாறு மாறு கிளாமர் காட்டும் சாக்‌ஷி அகர்வால்..!

டப்பிங் மற்றும் சீரியல்களில்…

இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிறமொழி படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தலைவாசல் விஜய் சிறந்த நடிகர் மட்டுமல்ல, மிகச் சிறந்த டப்பிங் கலைஞர். சினிமாவில் மட்டுமின்றி, டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார். தலைவாசல் விஜய்க்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர்.

அப்படியே அச்சு அசலாக மகன்…

இந்நிலையில் தலைவாசல் விஜய் மகன் ஜெய்வன்ட் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்தால் பலரும் அச்சு அசலாக அப்படியே தலைவாசல் விஜய் போலவே இருக்கிறார் என்று அசந்து போய் கூறி வருகின்றனர். அப்படியே Xerox எடுத்த மாதிரி தலைவாசல் விஜய் போலவே இருக்கிறாரே என்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.