முடிச்சி-விட்டீங்க-போங்க…-மண்ணை-கவ்விய-சிறகடிக்க-ஆசை-டிஆர்பி…-இந்த-வார-விவரம்!

முடிச்சி விட்டீங்க போங்க… மண்ணை கவ்விய சிறகடிக்க ஆசை டிஆர்பி… இந்த வார விவரம்!

முடிச்சி விட்டீங்க போங்க… மண்ணை கவ்விய சிறகடிக்க ஆசை டிஆர்பி… இந்த வார விவரம்!சின்னத்திரையில் முதல் 10 இடங்களுக்குள் சன் மற்றும் விஜய் டிவி இடங்களே தக்க வைத்து வருகிறது.

By Akhilan|26 Sept 2024 10:26 AM GMT

சிறகடிக்க ஆசை 

Siragadikka aasai: விஜய் டிவியின் பிரபல தொடரான சிறகடிக்க ஆசை டி ஆர் பில் மிகப்பெரிய அடியை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

தமிழ் சின்னத்திரை தொடர்கள் ஒவ்வொரு வாரமும் கதையை வைத்து ரசிகர்கள் நிகழ்ச்சியை பார்ப்பதை வைத்து டிஆர்பி ரேட்டிங் புள்ளிகள் கொடுக்கப்படும். பல வருடங்களாக சன் டிவி மட்டுமே இந்த ரேட்டிங்கில் முதல் பல இடங்களை பிடித்து வந்தது.

ஆனால் கடந்த சில வருடங்களாக ஸ்டார் விஜய் வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதன் மூலம் முதல் 10 இடங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களையாவது விஜய் டிவி தக்க வைத்து கொண்டு வந்தது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட தொடர்கள் முதல் சில இடங்களை பிடிப்பது வழக்கம்.

முதலிடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை கடந்த சில வாரங்களாக தேவையில்லாத கதை களத்தை உருவாக்கி ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறகடிக்க ஆசை முதலிடத்தை இழந்தது மட்டுமல்லாமல் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இத்தொடரின் முக்கிய கதையான ரோகிணி மற்றும் மனோஜியின் பித்தலாட்டங்கள் வெளிவராமல் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தேவையில்லாத சில துணைக் கதைகளும் இணைத்து பார்க்கும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை குறைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் நான்கு இடத்தை சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்கள் தான் இடம் பிடித்திருக்கிறது.

அதன் மூலம் சைத்ரா ரெட்டி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தான் இந்த வாரத்தின் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கிறது. அதை தொடர்ந்து, சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு மற்றும் மருமகள் சீரியல்கள் 4 இடங்களையும் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. சிறகடிக்க ஆசையில் குறிப்பிடப்பட்ட பரபரப்பு கதை வந்தால் மட்டுமே டிஆர்பியில் முந்தும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.