மீண்டும்-மீண்டுமா?-திடீர்-திருமணம்-செய்த-சிம்பு,-நடிகையுடன்-ரிலேஷன்ஷிப்-பா.?

மீண்டும் மீண்டுமா? திடீர் திருமணம் செய்த சிம்பு, நடிகையுடன் ரிலேஷன்ஷிப்-பா.?

சிம்பு குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு சில வெற்றிப் படங்களை கொடுத்த சிம்பு , பல சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களுக்குப் பிறகு இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளம் வருகிறார். தற்போது தக் லைப் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

கிட்டத்தட்ட 30 கிலோ எடையை குறைத்துவிட்டு ரீ- எண்டரி கொடுத்தார், மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். கடைசியாக இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல ஹாசன் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க சரித்திர படத்தில் கமிட் ஆனார். ஆனால், படம் ட்ரோப் என்று செய்திகள் பல நாட்களாக பரவி வருகிறது

என்னதான் சினிமாவில் இவர் முன்னணி நடிகராக இருந்தாலும், இதுவரை இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தற்போது இவருக்கு வயது 41. இனி எப்போ என்று தான் பலரும் கேட்டு வருகின்றனர். இதனிடையே பல பிரச்னைகள், சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நேரத்தில் சிம்புவின் பெற்றோர் ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் சிம்புவுக்கு திருமணத்திற்காக வரன் தேடி வருகிறார்கள்.

ஆனால் தற்போது, ஹீரோயின் கூட ரிலேஷன்ஷிப், கல்யாணமே ஆகிருச்சு! என்று புதிய வதந்தி ஒன்றை கிளப்பி விட்டுள்ளனர். யார் அந்த நடிகை தெரியுமா? சிம்புவுக்கும், நடிகை நிதி அகர்வாலுக்கும் திருமணம் நடக்க போவதாக வதந்திகள் பரவி வருகிறது. இருவரும் சில காலமாக லிவ் – இன் ரிலேஷன் ஷிப்பில் இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறப்படுகிறது.

இதன் உண்மை தன்மை பற்றி, இதுவரை இவர்கள் வெளிப்படையாக பேசவில்லை. விரைவில் இது தொடர்பாக சிம்பு தரப்பினர் அல்லது நிதி அகர்வால் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களது திருமணம் குறித்த செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளியானது. அப்போதும் இருவரும் இதற்கு பதிலளிக்கவில்லை. முன்னதாக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரின் மகளை, சிம்பு திருமணம் செய்ய இருப்பதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிம்புவின் திருமண செய்தி மட்டும் வதந்தி செய்தியாகவே இருக்கிறது.. இந்த வதந்தி உண்மையாக மாறினால் நன்றாக இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.