Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா பாண்டியன் கடைக்கு சென்று செண்டிமெண்டாக பேசி மனசை மாற்றி ஒரு வழியா சமாதானம் செய்துவிட்டார். இதனால் தங்கமயிலிடம் மாமா வீட்டுக்கு வரும்பொழுது எனக்கு பிடித்த பண்டங்கள் வாங்கிட்டு வந்து மீனா என்று கூப்பிட்டு தான் வீட்டிற்கு வருவார் என்று சொல்லி சவால் விடுகிறார்.
அதே மாதிரி பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் மீனா ராஜி என்று கூப்பிடுகிறார். இதை எதிர்பார்க்காத கோமதி மற்றும் மற்றவர்களும் ஆச்சரியமாக நின்னு பார்க்கிறார்கள். ஆனால் பாண்டியன் கூப்பிட்டதும் உடனே போயிடக் கூடாது என்று மீனா, ராஜிடம் கொஞ்ச நேரம் இருந்து கெத்து காட்டலாம் என்று சொல்கிறார். அதன் படி பாண்டியன் நிறைய தடவை மீனா ராஜி என்று கூப்பிடுகிறார்.
பாண்டியனை சமரசம் செய்த மீனா அதன் பின் மீனா வந்து என்ன மாமா என்று கேட்கும் பொழுது வாங்கிட்டு வந்த பண்டத்தை கொடுத்து சாப்பிடுங்கள் உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்கிறார். இதை பார்த்ததும் கோமதி, மீனா வந்து கடையில் பேசினதும் உங்க மனசு மாறி விட்டதா? கோபம் எல்லாம் போய்விட்டதா என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் என்ன வருஷம் முழுவதுமாக கோபமாக இருப்பாங்க?
என்னைப் பற்றி தெரியாதா? அதுவும் நம்ம வீட்டுக்கு நம்ம பிள்ளைகளை நம்பி வந்த மருமகள் மீது நான் எப்படி கோபப்படுவேன் என்று சொல்லி அனைவரும் முன்னணியில் மீனா ராஜியிடம் சமாதானமாக போய்விட்டார். இதெல்லாம் பார்த்த தங்கமயில் என்ன ஓவராக மாமா, மீனா மீது பாசத்தை காட்டுகிறார் என்று பொறாமைப்படும் அளவிற்கு முகத்தை காட்டுகிறார்.
அடுத்ததாக கதிர் எதிர்ச்சியாக ஒரு பேப்பரை தேடும் பொழுது ராஜியின் டிரஸ் கீழே விழுந்து விடுகிறது. இதனை பார்த்த ராஜி வேண்டுமென்று தான் இந்த கதிர் இப்படி பண்ணுகிறார் என்று மொத்த கோபத்தையும் வெளிப்படுத்தும் விதமாக கதிரை திட்டி தீர்த்து கோபத்துடன் வெளியே போய் தூங்க போய் விடுகிறார். அதே மாதிரி மீனா, எதையோ சாதித்த சந்தோசத்தில் பாண்டியன் கொடுத்த பண்டத்தை ரூம்குள் வைத்து சாப்பிட்டு இருக்கிறார்.
இதை பார்த்து கடுப்பான செந்தில், மீனாவிடம் பேச முயற்சி பண்ணுகிறார். ஆனால் மீனா, செந்திலை கண்டுக்காமல் உதாசீனப்படுத்திய நிலையில் ஐயோ பாவம் உன்னிடம் பேசலாம் என்று நினைத்தேன். ஆனால் நீ பண்றத பாத்தா எனக்கு பேச தோணவில்லை என்று செந்தில் சொல்கிறார். உடனே மீனா நீ ஒண்ணும் பாவப்பட்டு என்னிடம் பேச வேண்டாம். நீயா வந்து என்னிடம் பேசு என்று கேட்கும் வரை நானும் உன்னிடம் பேச மாட்டேன் என்று கோபப்பட்டு வெளியே தூங்கப் போய்விடுகிறார்.
இப்படி ராஜி மற்றும் மீனா வெளியே தூங்க வந்த பொழுது அங்கே கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் மாடிக்கு தூங்க போகலாம் என்று போகிறார்கள். அங்கே பழனிச்சாமி தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அவரை எழுப்பி ஹாலில் போய் தூங்க சொல்லி மொட்டை மாடியில் மீனா ராஜி தூங்கி விடுகிறார்கள். ஆனால் மீனாவை தேடி செந்தில் ஹாலுக்கு வந்த போது பழனிச்சாமியை எழுப்பி தொந்தரவு செய்கிறார்.
பிறகு விஷயத்தை கேள்விப்பட்ட செந்தில் மொட்டமாடிக்கு மீனாவை பார்த்து பேசுவதற்கு வருகிறார். ஆனால் மீனா பேச தயாராக இல்லாத நிலையில் செந்தில் கீழே போய்விடுகிறார். இதையெல்லாம் தாண்டி ராஜி, பாண்டியனிடம் சொல்லி மறுபடியும் டியூஷன் எடுப்பதற்கு முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் இந்த முறை பாண்டியன் சம்மதம் கொடுத்து விடுவார். அடுத்ததாக டியூஷன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த கையோடு பாண்டியனின் 50-வது பிறந்தநாளுக்கு மூன்று மருமகள் சேர்ந்து சப்ரைஸ் பண்ணப் போகிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள் பாண்டியனின் 50வது பிறந்தநாளுக்கு மருமகள்கள் செய்யும் சர்ப்ரைஸ் பாண்டியனுக்கு ஐஸ் வைத்து டியூஷன் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த மீனா செண்டிமெண்ட் ஆக பேசி பூமர் பாண்டியனை கவிழ்த்த மீனா