அனைவரின்-முன்பும்-உண்மையை-உடைத்த-ராஜி-சிங்கம்-சூர்யா-போல்-குமாரை-அறைந்த-பாண்டியன்.

அனைவரின் முன்பும் உண்மையை உடைத்த ராஜி.. சிங்கம் சூர்யா போல் குமாரை அறைந்த பாண்டியன்..

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியலும் இடம் பிடித்துள்ளது. இதன் முதல் பாகம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது முதல் பாகம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இரண்டாவது பாகத்திலும் குடும்ப கதை என்பதால் மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள் அதிலும் பாண்டியன் தன்னுடைய மகன்களுக்கு நல்ல அப்பாவாகவும் மருமகளுக்கு நல்ல மாமனாராகவும் நடித்து வருகிறார். மேலும் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகளை சமாளித்து பாண்டியன் அனைவரையும் ஒத்துமையாக ஒன்றாக இருக்கும் படி செய்து வருகிறார்.

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பாண்டியன் மச்சான் மகன் குமாருக்கு பெண் பார்த்து உள்ளார்கள் அவர்கள் வீட்டிற்கு வர இருக்கிறார்கள். பாண்டியனை பார்த்து விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது பெண் வீட்டார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது பாண்டியன் மச்சான்கள் அவர்களிடம் என்ன பேச்சு மானங்கெட்டவங்கள் என பேச அதற்கு பாண்டியன் கோவப்படுகிறார்.

அந்த சமயத்தில் ராஜி உங்க புள்ள பண்ண லட்சணம் என்னன்னு தெரியுமா என குமார் பற்றி கூறுகிறார் அதாவது சரவணனுக்கு திருமணம் நடக்கும் பொழுது பெண்ணை கடத்துவதாக நினைத்து ராஜி மற்றும் மீனாவை கடத்தியதை அனைவரும் முன்பும் கூறுகிறார் இதனால் பாண்டியன் என் மருமகள்களையா கடத்தின என கோபப்பட்டு குமாரை கன்னத்தில் அறைந்து அடிக்கிறார்.

இதனை அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள் குமார் அடி வாங்கியதை பார்த்ததால் இவ்வளவு மோசமானவனுக்கு எங்கள் பொண்ணு கிடையாது என பெண் வீட்டார் முடிவு செய்ய இருக்கிறார்கள் இதனை வரும் எபிசோடில் பார்க்கலாம்.