பா.ரஞ்சித் ஆசையை நிறைவேற்றிய அட்டகத்தி தினேஷ்! என்ன மாறி ஆசைனு தெரியுமா?அட்டகத்தி தினேஷ் மேல் இவ்ளோ அக்கறையா பா.ரஞ்சித்திற்கு? என்னனு பாருங்க
By rohini|28 Sept 2024 11:14 AM GMT
dinesh
அனல் பறக்கும் வசனங்களாலும் தெறிக்க விடும் அரசியல் கருத்துக்களாலும் ஜாதி பற்றி பேசும் படங்களை எடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். சினிமாவையும் தாண்டி அரசியலும் பேசக் கூடியவர் பா. ரஞ்சித். சமூகத்தில் நடக்கும் சில பிரச்சினைகளை மிகத் தைரியமாக தட்டி கேட்பவர். சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு பல விமர்சனங்களுக்கும் ஆளாகியிருக்கிறார்.
இவரது படங்கள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருக்கும். இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் தயாரிக்கவும் செய்கிறார். தனது நீலம் புரடக்ஷன் தயாரிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார் பா. ரஞ்சித் .தன்னுடைய வலையத்திற்குள் ரஜினியையும் கொண்டு வந்து மிகப்பெரிய ஹிட்டாக்கியவர் பா. ரஞ்சித்.
காலா படத்தில் ரஜினியும் ரஞ்சித்தும் இணைகிறார்கள் என்று சொன்னதும் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. ரஞ்சித்தின் படங்கள் பொதுவாக ஒடுக்கப்பட்டவர்களின் நிலையை எடுத்துக் கூறும் படமாக இருக்கும். இதில் ரஜினி எப்படி சாத்தியமாவார் என்றெல்லாம் யோசித்தார்கள். ஆனால் படத்தை மிகப்பெரிய அளவில் கொடுத்து ஹிட்டாக்கினார் பா. ரஞ்சித்,
சமீபத்தில் கூட தங்கலான் படத்தை இயக்கியதன் மூலம் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இந்த நிலையில் பா. ரஞ்சித்தை பற்றி அட்டகத்தி தினேஷ் ஒரு சுவாரஸ்ய தகவலை கூறியிருக்கிறார். அட்டகத்தி தினேஷை அறிமுகப்படுத்தியதே பா. ரஞ்சித்தான். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ் அதிலிருந்தே அட்டகத்தி தினேஷ் என மாறினார்.
சமீபத்தில் தினேஷ் நடித்த லப்பர் பந்து திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தின் மூலம் கெத்து தினேஷ் என மாறியிருக்கிறார் தினேஷ். இதுதான் பா. ரஞ்சித்தின் ஆசையும் கூட என தினேஷ் ஒரு பேட்டியில் கூறினார்.
தினேஷிடம் பா. ரஞ்சித் ‘எவ்ளோ படங்கள் நடிச்சிருப்ப? ஏதாவது மாற்றம் வந்துச்சா? அதுக்கான வழியை தேடு’ என அடிக்கடி கூறுவாராம். அதற்கான வழி லப்பர் பந்து என தினேஷ் கூறியிருக்கிறார். அதாவது பா. ரஞ்சித் எப்போது அட்டகத்தி தினேஷ் பெயரை மாத்தப் போற என்று அடிக்கடி கேட்பாராம். ஆனால் லப்பர் பந்து படத்தால் கெத்து தினேஷாக மாறியிருக்கிறார். இப்போது பா. ரஞ்சித் மிகவும் சந்தோஷமாக இருப்பார் என நினைக்கிறேன் என தினேஷ் கூறினார்.