கங்குவா-படத்தை-குழந்தைகள்-தினத்துல-ரிலீஸ்-பண்றதுக்கு-இதுதான்-காரணமா?-ரொம்ப-நல்லா-வருவீங்க.!

கங்குவா படத்தை குழந்தைகள் தினத்துல ரிலீஸ் பண்றதுக்கு இதுதான் காரணமா? ரொம்ப நல்லா வருவீங்க..!

சூர்யாவின் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் வெளிவர உள்ள படம் கங்குவா. இந்தப் படத்தை 38 மொழிகளில் வெளியிட இருக்கின்றனர். 350 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் தயாராகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், ஆராஷ் ஷா, ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

முதலில் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் என அறிவித்து இருந்தனர். அந்த நாளில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சூர்யா பெரிய நடிகருக்கு வழிவிடுவதாகக் கூறி தன் படத்தின் ரிலீஸைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

அதன்பிறகு சமீபத்தில் இந்தப் படத்துக்கான ரிலீஸ் தேதி நவம்பர் 14 என அறிவிக்கப்பட்டது. இதன் காரணம் என்ன என்பது தற்போது பலரும் பேசும் பொருளாக மாறிவிட்டது.

கங்குவா படத்தை நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்துக்கு ரிலீஸ் பண்றதா அறிவிச்சிருக்காங்க. இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா என வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

அக்டோபர் 31ம் தேதி தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவருகிறது அமரன். அதே போல ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர், கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.

அதனால் தான் அந்தப் படங்களின் வெளியீட்டு தேதிக்கு 15 நாள்கள் தள்ளி கங்குவா படத்தோட ரிலீஸ் தேதியை அறிவிச்சிருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் வருவதாலும் தனியாகவே தன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சூர்யா நினைத்ததாலும் தான் இந்தப் படம் நவம்பர் 14ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது இயக்குனர் ஷங்கர் தன் வேள்பாரி கதையில் இருந்து முக்கிய விஷயங்களை சில படங்களில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில் பொத்தாம்பொதுவாக சில படங்களில் என்று சொன்னதால் தேவராவா அல்லது கங்குவாவா என சினிமா விமர்சகர்கள் குழம்பி வருகின்றனர்.