Jayam Ravi: கடந்த சில நாட்களாகவே சமூகவலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதுதான். கிசுகிசுவாக செய்தி வெளியான நிலையில், மனைவி ஆர்த்தியை பிரிய முடிவெடுத்திருப்பதாக ஜெயம் ரவியே அறிவித்தார்.
மேலும், இது தன்னை சார்ந்தவர்களுக்காக எடுத்த முடிவு என்றும் விளக்கமளித்தார் ஜெயம் ரவி. ஆனால், இது எனக்கு தெரியாமல் ஜெயம் ரவி அவராகவே எடுத்த முடிவு.. அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். நானும், என் குழந்தைகளும் தவித்து வருகிறோம் என சொன்னார் ஆர்த்தி.
ஒருபக்கம், கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி கோவாவில் ஒரு பாடகியுடன் தங்கியிருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த பாடகிதான் ஜெயம்ரவியின் விவகாரத்திற்கு காரணம் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், பிரதர் பட இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த ஜெயம் ரவி அந்த செய்தியை மறுத்தார்.
வாழு வாழவிடு.. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசாதீர்கள். என் சொந்த வாழ்க்கையில் தலையிட வேண்டாம். நானும், அந்த பெண்ணும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் செண்டர் துவங்க திட்டமிட்டிருக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். அதோடு, பட விழாவில் ஜாலியாக நடனமாடி விட்டு போனார்.
ஜெயம் ரவி – ஆர்த்தி காதலுக்கு உறுதுணையாக இருந்தவர் குஷ்புதான். ரவியின் மாமியார் சுஜாதாவின் தோழிதான் குஷ்பு. ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது ஆசை இருப்பதை தெரிந்துகொண்டு அவர்தான் திட்டம் போட்டு சிங்கப்பூருக்கு இருவரையும் அழைத்து சென்று நெருங்கி பழக வைத்தார். இப்போது ரவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருப்பது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
டிவிட்டர் பக்கத்தில் ‘மனைவியை பிரிந்தவன் மனுஷனே இல்லை. அவனுக்கு வாழ்வும் தகுதியில்லை’ என காட்டமாக பதிவிட்டிருந்தார். அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும் அவர் ஜெயம் ரவியைத்தான் சொல்கிறார் என பலரும் புரிந்துகொண்டனர்.
ஆனால், இதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொள்ளும் நிலையில் ஜெயம் ரவி இல்லை. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கவுள்ள காதலிக்க நேரமில்லை படத்திற்காக 18 கோடி சம்பளம் பேசியிருக்கிறாராம் ரவி. பிரதர் படத்தில் ‘மக்காமிஷி’ பாடல் ஹிட் அடித்திருக்கிறது. அந்த படம் ஓடிவிட்டால் 25 கோடி சம்பளம் ஏத்திவிடுவார் ரவி என்கிறது திரையுலகம்.