Suchitra: பாடகி சுசித்ராவின் சமீபத்திய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரலாகி வந்தது. இதைத் தொடர்ந்து சுசித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே நிறைய விஷயங்களை பற்றி வீடியோ போட ஆரம்பித்திருக்கிறார்.
சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி பற்றி பேசி அதன் பின்னர் அந்த வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டது கூட குறிப்பிடத்தக்கது. இப்படி தன்னுடைய கருத்துக்களில் அதிக முரண்பாடு கொண்டிருக்கும் சுசித்ரா சமீப காலமாக தனுஷை பற்றி ஒரு சில விஷயங்களை பேசி வருகிறார்.
அதில் தனக்கு தனுஷ் நல்ல நண்பன் என்றும், ஒரு சில கூடா நட்பு தான் அவரை கெடுத்து விட்டது என்றும் பேசி இருந்தார். தனுஷ் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்று சொல்லிவிட்டு, இப்போ இப்படி அந்தர் பல்ட்டி அடிக்கிறாரே சுசித்ரா என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.
புது குண்டை தூக்கி போட்ட சுசித்ரா இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் தனுஷ் பற்றி சுசித்ரா இன்னொரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். அதாவது நடிகர் தனுஷை பாடகி சுசித்ரா முதன் முதலில் ஒரு விழா போதுதான் சந்தித்தாராம். அப்போது தனுஷ் ரொம்பவும் சோகமாகவும் தனியாகவும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தாராம்.
சுசித்ரா அங்கு தனுஷ் உடன் அமர்ந்து ரொம்ப நேரம் பேசினாராம். இதனால் தனுஷுக்கு சுசித்ராவை ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் வரும் மதுர ஜில்லா மச்சான் தாண்டி பாடலை பாடுவதற்காக சுசித்ராவை இசையமைப்பாளர் இமானின் ஸ்டுடியோவிற்கு அழைத்து சென்றாராம்.
அப்போது இமான் நடிகர் தனுஷ் சொல்லியதால் தான் உன்னை பாட வைக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இது சுசித்ராவுக்கு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட உடனே அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாராம். அதன் பின்னர் தனுஷ் சுசித்ராவுக்கு போன் பண்ணி சமாதானப்படுத்தி இருக்கிறார்.
அதேபோன்று சுசித்ரா செல்லும் யோகா மையத்திற்கு தான் தனுஷ், சூர்யா, சௌந்தர்யா ரஜினிகாந்த் போன்றவர்கள் செல்வார்களாம். அப்போது ஒரு நாள் நேற்று சௌந்தர்யா ரஜினிகாந்த் நிச்சயதார்த்தம் நடந்தது நீ போகவில்லையா என யோகா மையத்தில் சுசித்ராவிடம் யாரோ கேட்டிருக்கிறார்கள்.
அப்போது சுசித்ரா எனக்கு அந்த வீட்டில் தனுஷை தவிர வேற யாரையும் பிடிக்காது என சொல்லி இருக்கிறார். இதை கேட்ட தனுஷின் தோழி பூர்ணிமா என்பவர் அதை தவறாக தனுஷிடம் சொல்ல அதிலிருந்து தனுஷ் தன்னிடம் பேசவில்லை என சொல்லி இருக்கிறார்.