எங்கடா அந்த யெல்லோ சேரி.. வெளியான மட்ட வீடியோ சாங்… இத நோட் பண்ணீங்களா?விஜயின் நடிப்பில் கடைசி திரைப்படங்களில் ஒன்றாக கோட் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
By Akhilan|23 Sept 2024 1:55 PM GMT
விஜய் திரிஷா
Vijay: விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் படத்தின் வீடியோ சாங் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.
இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்திருந்தார். அழகிய தமிழ் மகன் படத்தில் பிறகு விஜய் இப்படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக நடித்திருக்க அவருடைய நடிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மைக் மோகன் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வில்லனாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் கதை பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை என்ற அதை தன்னுடைய திரைக்கதையால் வெங்கட் பிரபு சமாளித்தார் என்றே கூற வேண்டும். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா இருவரும் நடித்திருந்தனர்.
கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்கள் சிவகார்த்திகேயன் தோன்றினார். அந்த காட்சி ரசிகர்களிடம் அப்பிளாசை அள்ளியது. அதுபோல மட்ட பாடலில் த்ரிஷா ஆடிய நடனம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனம் எடுத்தது. அதில் அவருடைய உடை முதல் நடனம் வரை தற்போது ரீல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒரிஜினல் வீடியோ பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தற்போது மீண்டும் இப்பாடலை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி இருக்கின்றனர். ஒரு சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் நடிகை மீனாட்சி சவுத்ரியை விட அதிக வரவேற்பை பெற்றது திரிஷா தான் என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.