4-வருடத்துக்குப்-பின்-ரீ-என்ட்ரி-கொடுத்த-கணவன்-மனைவி.-அஜித்-புகழ்-பாடும்-சீனா-தானா

4 வருடத்துக்குப் பின் ரீ என்ட்ரி கொடுத்த கணவன் மனைவி.. அஜித் புகழ் பாடும் சீனா தானா

காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் தங்களுடைய குழந்தைக்காக நான்கு வருடம் சினிமாவை விட்டுக் கொடுத்து ஒதுங்கி இருந்தனர். இப்பொழுது அந்த குழந்தை வளர்ந்ததை ஒட்டி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நடிக்க வந்ததுமே பெரிய பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இருவரும் கடைசியாக 2020 ஆம் ஆண்டு சினிமாவில் நடித்துள்ளனர். அதன் பின்னர் கல்யாணம் பண்ணி செட்டிலாகி விட்டனர். கணவனை விட மனைவிக்கு இரண்டு வயது அதிகம் என்றாலும் கூட இவர்கள் காதல் கண்களை மறைத்தது. இருவரும் 2-3 படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு வெளிவந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் ஜோடி சேர்ந்தவர்கள் பிரசன்னா மற்றும் சினேகா. இந்த படத்தின் மூலம் இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனதால் இவர்கள் காதலில் விழுந்தனர். வெளிநாடுகளில் இந்த படம் சூட்டிங் நடைபெற்றதால் அங்கேயே இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர்.

அதன்பின் இருவரும் 2012 ஆம் ஆண்டு காதல் உறவிலிருந்து கல்யாண உறவுக்கு மாறிவிட்டார்கள். இந்த தம்பதிகளுக்கு எட்டு வயதில் ஒரு மகனும். நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இப்பொழுது சினிமாவில் இவர்கள் இருவரும் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விட்டார்கள்.

அஜித் புகழ் பாடும் சீனா தானா சினேகா விஜய் நடித்த கோட் படத்தில் கிட்டத்தட்ட நான்கு வருடம் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். இவர் கடைசியாக 2020 ஆம் ஆண்டு தனுசுடன் பட்டாசு படத்தில் இணைந்து நடித்தார். அதை போல் தான் இப்பொழுது பிரசன்னாவும் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக 30 நாட்கள் கால் சீட் கொடுத்துள்ளார். பிரசன்னா ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்தாலும் பின்னர் தன்னை ஒரு காமெடி ஹீரோவாக சீனா தானா படத்தின் மூலம் மாற்றிக்கொண்டார்.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு கொட்டிய வியாபாரம் அஜித் சம்பளத்தில் கை வைக்கும் லைக்கா உறுதியான குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி