Dance Master Jhony: பாலியல் தொடர்பான பிரச்சனைகள் மலையாள சினிமாவை ஒரு புரட்டு புரட்டி போட்டிருக்கிறது. ஹேமா கமிட்டி என்ற ஒரு கமிட்டியை ஆரம்பித்து அங்குள்ள பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது எஃப் ஐ ஆரும் போடப்பட்டு வருகின்றன. அதில் பல முன்னணி நடிகர்கள் சிக்கி இருக்கின்றனர்.
இன்னும் ஹேமா கமிட்டியின் மூலம் முழுமையான ஒரு அறிக்கை வெளியிடாத நிலையில் இன்னும் எத்தனையோ பேர் சிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த ஹேமா கமிட்டியின் தாக்கம் பிறமொழி சினிமாக்களிலும் அதிகமாகவே ஏற்பட்டிருக்கிறது .அந்த கமிட்டியை பற்றி தமிழ் நடிகர்களிடம் கேட்டாலே பயந்து ஓடுகிறார்கள்.
இதையும் படிங்க: கைதியை விட அட்டகாசமா இருக்கும் போலயே! ‘கார்த்தி 29’ படத்தின் கதை என்ன தெரியுமா?
அதுமட்டுமல்ல தமிழ் சினிமா நடிகைகளே இப்போது அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். தமிழிலும் அந்த ஒரு கமிட்டி வந்தால் இங்கேயும் பல பேர் நிலைமை கேள்விக்குறியாக விடும் என்று மறைமுகமாக கூறி வருகிறார்கள். அதற்கு முன்னெடுப்பாக தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் நடிகை ரோகிணி தலைமையில் விசாகா கமிட்டி என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அதன் முதல் கட்டமாக நடிகைகளை பற்றி அவதூறாக பேசி வரும் டாக்டர் காந்தராஜ் மீது நடிகை ரோகிணி வழக்குப்பதிவு செய்துள்ளார் .இந்த நிலையில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது ஒரு பெண் நடன கலைஞர் பாலியல் புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். இவர் ஜானி மாஸ்டரிடம் நடன கலைஞராக வேலை செய்து வருகிறாராம்.
இதையும் படிங்க: ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்
சென்னை மும்பை ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களுக்கு ஜானி மாஸ்டருடன் செல்லும் இந்தப் பெண் நடன கலைஞரை அவ்வப்போது ஹோட்டலுக்கு வரவழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறாராம் ஜானி மாஸ்டர். மேலும் அவரது வீட்டிற்கே வரவழைத்து பலமுறை பாரத்காரம் செய்துள்ளதாகவும் அந்தப் பெண் நடன கலைஞர் போலீசீர் புகார் அளித்திருக்கிறார்.
இதனால் போலீசார் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது கொலை மிரட்டல் கற்பழிப்பு தானாக முன்வந்து காயப்படுத்துதல் போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜானி மாஸ்டர் மீது அவரிடம் வேலை செய்யும் பெண் நடன கலைஞர் கொடுத்த பாலியல் புகார் பற்றிய சம்பவம் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…
ஜானி மாஸ்டர் பீஸ்ட் படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். விஜயின் சமீபகால பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குனராக இருந்து வருகிறார். ஹபி ஹபி போ மற்றும் ரஞ்சிதமே போன்ற பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குனர்.