BREAKING : விவாகரத்து பிரச்சனை.. தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு.. என்ன நடந்தது..? Trending News

தமிழ் திரை உலகில் இயக்குனராக விளங்கிய கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களது சம்மதத்தோடு 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து விட்டார்கள்.

இதையும் படிங்க: என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

இந்நிலையில் இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ள நிலையில் திடீர் என இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமையை அடுத்து விவாகரத்து செய்யப் போவதாகவும் அது நிமித்தமாக தற்போது பிரிந்து வாழ விரும்புவதாகவும் கூறி இருந்தார்கள்.
வெடிக்கும் விவாகரத்து பிரச்சனை..

அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா அவர்களது பிரிவை பலருக்கும் தெரியக்கூடிய வகையில் அறிக்கையாக சமர்ப்பித்து கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

அத்தோடு சமீபத்தில் விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து இவர்கள் 2004-ஆம் ஆண்டு செய்து கொண்ட திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்து வருகிறது.

தமிழ் திரை உலகில் முன்னணியில் இருக்கும் நடிகர் தனுஷை ஐஸ்வர்யா விட்டுப் பிரிய என்ன காரணம் என்ன என்று தெரியாமல் இருந்த பலருக்கும் தனுஷ் பல பெண்களோடு தொடர்பு இருப்பதால் தான் ஐஸ்வர்யா இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்ற விஷயமும் லீக்கானது.
தனுஷ் ரஜினிகாந்த் நேரில் சந்திப்பு..

இந்நிலையில் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்று சேர்ந்து எப்போதும் போல் வாழ மாட்டார்களா? என்று மனக்கோட்டை கட்ட ஆரம்பித்தார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் அவர்களுக்காக இல்லை என்றாலும் இரண்டு குழந்தைகளுக்காக அவர்கள் சேர்ந்து வாழ்வதில் தவறில்லை என்று பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்.

எனினும் இருவரும் சேர்ந்து வாழ சரியான சூழல் அமையாத நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தனுஷை அழைத்து ரஜினிகாந்த் பேசி இருக்கிறார். இந்த சந்திப்பானது போயஸ் கார்டனில் இருக்கும் ரஜினியின் வீட்டில் நடந்துள்ளது.
என்ன நடக்கிறது..

அத்தோடு அந்த சந்திப்பில் ரஜினிகாந்த் குழந்தைகளுக்காக இருவரும் மீண்டும் சேர்ந்து வாழுமாறு தனுஷிடம் வலியுறுத்தி இருக்கிறார். ஆனால் எனக்கு விவாகரத்து தான் வேண்டும் என்று உறுதியாக ஐஸ்வர்யா கூறிவிட்டாராம்.

இதே போல தனுஷ் வீட்டாரும் இருவரையும் சேர்த்து வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். எனினும் அவை யாவும் பலன் தரவில்லை. தன் கணவர் தனுஷோடு இணைந்து வாழ இன்னும் ஐஸ்வர்யாவிற்கு மனது வரவில்லை. மேலும் பிடிவாதம் ஆகவே விவாகரத்து தான் வேண்டும் என்று இருக்கிறார்.

இதையும் படிங்க: செம்ம மூடில் பிக்பாஸ் அபிராமி.. அந்த பட்டனையாவது விட்டு வைங்க.. கெஞ்சும் ரசிகர்கள்..!

இதனை அடுத்த நிலையில் தான் இவர்கள் இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான விஷயம் வெளி வந்து இணைந்து வாழ்வது சாத்தியம் இல்லை என்பது போல விவகாரம் அமைந்துவிட்டது.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மனதளவில் வேதனை அடைந்து இருக்கிறார்கள். மேலும் இந்த விஷயம் காட்டு தீ போல இணையங்களில் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களால் அதிகளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.