Sasikumar: இயக்குனரும் நடிகருமான சசிகுமார் இன்று தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தற்போது திரை பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நந்தன் பட இயக்குனர் சரவணன் மட்டும் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அதை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் அவர் ஒரு பதிவாக வெளியிட்டுள்ளார்.
அதில் நந்தன் படத்திற்காக சசிகுமார் எந்த அளவுக்கு தன்னை வருத்திக் கொண்டார் என்றும் நான் எந்த அளவுக்கு அவரை கொடுமை படுத்தினேன் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். அதன்படி காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக அவரை இயக்குனர் படாத பாடு படுத்தி இருக்கிறார்.
பற்கள் கரையாக மாற வேண்டும் என்பதற்காக வெற்றிலைக்கு பழக்கமானதில் தொடங்கி கேரவனில் ஏறக்கூடாது மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என பல கண்டிஷன் இருந்திருக்கிறது. அதிலும் வில்லன் ஒரு காட்சியில் சசிகுமாரை முகத்திலேயே மிதிக்க வேண்டும்.
ஆனால் முடியவே முடியாது என பாலாஜி சக்திவேல் மறுத்திருக்கிறார். இயக்குனர் பிடிவாதமாக இருந்து ஒரிஜினல் ஆகவே மிதிக்க வைத்திருக்கிறார். அது மட்டும் இன்றி பல பேர் பயன்படுத்திய கழிவறைக்குள் தள்ளி விடுவதில் ஆரம்பித்து தென்னை மட்டையால் நடு முதுகில் அடிப்பது வரை பல சங்கடங்கள் இருந்திருக்கிறது.
சசிகுமாரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் ஆனால் இது எதற்குமே சசிகுமார் மறுப்பு சொல்லவில்லையாம். வேறு ஒரு நடிகராக இருந்தால் போடா என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுவார்கள். ஆனால் அவர் நான் எதிர்பார்த்தது போல் நடித்துக் கொடுத்தார். இதில் ஒருமுறை தோள்பட்டை கிழிந்து ரத்தம் கொட்டியது நடுமுதுகில் அடி வாங்கி காயமானது.
இதனால் கடும் ஜூரத்தால் அவர் அவதிப்பட்டார். ஆனாலும் நந்தன் படத்திற்காக அனைத்தையும் சசிகுமார் ஏற்று நின்றார். இவ்வளவு ஏன் கொடுமைப்படுத்த வேண்டும் என கேட்கலாம். ஆனால் இதைவிட அதிகமாக தாழ்த்தப்பட்ட பிரிவிலிருந்து வந்த ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதைத்தான் நந்தன் பிரதிபலித்திருக்கிறது. தற்போது எல்லோரும் தன்னை பாராட்டுவதாக சசிகுமார் என்னிடம் கூறினார். ஆனால் நான் அவரிடம் கூறுவது ஒன்றுதான் என்னை மன்னித்து விடுங்கள் சார் என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவை படிக்கும் போதே பதை பதைக்கிறது. ஆனால் ஒரு நடிகனாக சசிகுமார் இதை ஏற்றுக்கொண்டு அர்ப்பணிப்போடு நடித்துக் கொடுத்தது பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இப்படி நந்தனாக மக்கள் மனதில் இடம் பிடித்த சசிகுமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நந்தனுக்காக கஷ்டப்பட்டு நடித்த சசிகுமார் கவனிக்காமல் விட்ட டைரக்டரை கூப்பிட்டு சசிகுமார் கொடுத்த வாய்ப்பு வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார் சசிகுமாரின் நந்தன் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்