Biggboss tamil: விஜய் டிவியில் துவங்கப்பட்ட நிகழ்ச்சிதான் பிக்பாஸ். முதல் சீசன் துவங்கி இதுவரை 7 சீசன்கள் முடிந்துவிட்டது. 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரு வீட்டில் அடைத்து 100 நாட்கள் வரை அங்கே இருக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. அதோடு, பிக்பாஸ் சொல்லும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மேலும், பிக்பாஸ் கொடுக்கும் எல்லா டாஸ்க்குகளையும் சரியாக செய்ய வேண்டும். எல்லா டாஸ்க்குகளையும் சரியாக செய்வதோடு, சக போட்டியாளர்கள் கொடுக்கும் பிரச்சனைகளை தாக்குப்பிடித்து சமாளித்து முன்னேற வேண்டும். குறிப்பாக போட்டியை நேர்மையாக விளையாட வேண்டும்.
இதையும் படிங்க: பிக்பாஸ்லயும் பிரியங்காவ முன்னிலை படுத்த விரும்பிய நிர்வாகம்.. கமலிடம் முடியுமா?
அப்படி விளையாடும் இருவர் இறுதிப்போட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கடைசியில் அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு அவருக்கு கொடுக்கப்படும். பிக்பாஸில் பிரபலமாகும் போட்டியாளர்களுக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் பலரும் இதில் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
இதுவரை முடிந்த 7 சீசன்களையும் கமல்ஹாசனே நடத்தினார். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் அவர் வருவார். எந்த போட்டியாளர் அந்த வாரம் நன்றாக விளையாண்டார், யார் எந்த தவற்றை செய்தார்?. அந்த வாரம் யார் வெளியேற்றப்படுகிறார் என எல்லாவற்றையும் அவர் சொல்லுவார்.
இந்தமுறை கமல் விலகிவிட்ட நிலையில் விஜய் சேதுபதி அந்த வேலையை செய்யவிருக்கிறார். விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 துவங்கவுள்ளது. வழக்கம்போல் விஜய் டிவி மூலம் ஏற்கனவே பிரபலமான சிலரும் இதில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். விஜய் டிவி ராமர் பெயரும் இதில் அடிபட்டது.
#image_title
இந்நிலையில், நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களிலும் ரஞ்சித் நடித்திருக்கிறார். சமீபத்தில் நாடக காதலுக்கு எதிராக கவுண்டம்பாளையம் என்கிற படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கூறிய கருத்து சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ரஞ்சித் உள்ளே போனால் பிக்பாஸ் வீட்டில் சண்டைக்கு குறைச்சல் இருக்காது என சொல்லப்படுகிறது.