ஆர்த்தியை-பிரிந்த-ஜெயம்-ரவி.-வதந்தியை-உண்மையாக்கிய-விவாகரத்து-அறிவிப்பு

ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவி.. வதந்தியை உண்மையாக்கிய விவாகரத்து அறிவிப்பு

திரையுலகில் க்யூட் ஜோடியாக வளம் வந்தவர்கள் தான் ஜெயம் ரவி ஆர்த்தி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இப்படி நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய 15 வருட திருமண வாழ்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இப்படி ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டது அது வதந்தியாகவே இருக்கட்டும் என ரசிகர்கள் வேண்டாத தெய்வம் இல்லை.

ஆனால் தற்போது அது வதந்தி இல்லை உண்மை என ஜெயம் ரவி அறிவித்திருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வை முடித்துக் கொள்வதாக முடிவெடுத்துள்ளேன்.

இந்த நேரத்தில் என்னுடைய தனி உரிமைக்கும் எனக்கு நெருக்கமானவர்களின் தனி உரிமைக்கும் மதிப்பளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட விஷயம் நான் என்றும் எப்போதும் உங்களுடைய ஜெயம் ரவியாக இருக்கவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதை பார்க்கும் போதே இப்படி ஒரு முடிவை அவர் எடுப்பதற்கு எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பார் என்பது புரிகிறது ஆனால் சேர்ந்து இருந்து சண்டை போடுவதை விட பிரிந்து இருந்து நண்பர்களாக இருப்பதே மேல்.

அதைத்தான் ஜெயம் ரவியும் செய்திருக்கிறார் இனிமேலாவது அவருடைய வாழ்க்கையின் இரண்டாவது பாகம் சந்தோசமாக இருக்கட்டும் என ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர் நாளை அவர் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.