வெளியானது iQooவின் அட்டகாசமான iQoo Z6 பட்ஜெட் ஸ்மார்ட்போன்!!

iQoo  பிராண்டின்  iQoo Z தொடரின்  அடுத்த ஸ்மார்ட்போன் iQoo Z6 5G இந்தியாவில் இன்று  அறிமுகப்படுத்தப்பட்டது. 120Hz டிஸ்ப்ளேவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்  695 SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8GB RAM மற்றும்  மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. iQoo Z6 5G ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கும்போது இது  Redmi Note 11 Pro+ 5G, Vivo T1 5G மற்றும் Samsung Galaxy A52 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் 

விவரக்குறிப்புகள்:

ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன்  695 SoC பிராசஸர்

6.58  இன்ச் FHD+ டிஸ்ப்ளே,கொரில்லா கிலாஸ் பாதுகாப்பு ,120Hz refresh rate

6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம்  

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12வுடன்  Funtouch OS

பின்பக்க கேமரா : 50 மெகாபிக்சல்  பிரைமரி samsung f/1.8 lens ISOCELL JN1 + 2-megapixel மேக்ரோ சென்சார்  (f/2.4, 1.75um),+ 2 megapixel பொக்கே கேமரா

முன்பக்க கேமரா : 16 மெகாபிக்சல் Samsung 3P9 செல்ஃபி கேமரா(f/2.0)

5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, NFC, USB Type-C, and a 3.5mm headphone jack.

எடை 187g

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,18W சார்ஜிங் சப்போர்ட் 

இந்தியாவில்  iQoo Z6 5G – 4 ஜிபி+128ஜிபி மாடலின் விலை ரூ .13,999. 6 ஜிபி +128ஜிபி மாடலின் விலை ரூ .14,999 , 8ஜிபி+128ஜிபி  மாடலின் விலை 15,999 கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் Chromatic Blue மற்றும் Dynamo Black  நிறங்களில் வருகின்றன.மார்ச் 22 முதல் Amazon மற்றும் iQoo India eStore மூலம் இந்த மொபைலை வாங்கலாம். 

iQoo Z6 5G இல் அறிமுக சலுகையாக HDFC வங்கி கார்டுஅல்லது EMI பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும் .