அறிமுகமானது சாம்சங்கின் F23 5G ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் விவரங்கள் இதோ ..!!!!

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Galaxy F22க்கு அடுத்தபடியாக சாம்சங் நிறுவனம் நேற்று  சாம்சங் கேலக்ஸி F23 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.மூன்று பின்புற கேமராக்களை உள்ளடக்கிய இந்த போன் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இந்த மொபைல்  வாய்ஸ் ஃபோகஸ் அம்சத்துடன் ப்ரீலோட் செய்யப்பட்டுள்ளதால், இது சுற்றுப்புற இரைச்சலைக் குறைக்கவும், அழைப்புகளைச் செய்யும்போது குரலைப் பெருக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது

விவரக்குறிப்புகள்:

குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G பிராசஸர்

சினிமா பார்க்கும் அனுபவத்தை தருகின்ற வகையில் 6.6  இன்ச் FHD+ Infinity-U டிஸ்ப்ளே,கொரில்லா கிலாஸ் பாதுகாப்பு ,120Hz refresh rate

4 ஜிபி ரேம் மற்றும்128 ஜிபி வரை மெமரி/6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை மெமரி

MIUI 11

டூயல் சிம் ஸ்லாட்

ஆண்ட்ராய்டு 12வுடன் One UI 4.1

பின்பக்க கேமரா : 50 மெகாபிக்சல்  பிரைமரி( f/1.8 lens ISOCELL JN1)  + 2-megapixel மேக்ரோ சென்சார்  (f/2.4, 1.75um),+ 8 megapixel அல்ட்ரா வைடு சென்சார்(123-degree field of view)

முன்பக்க கேமரா : 13 மெகாபிக்சல்  செல்ஃபி கேமரா

5G, 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, NFC, USB Type-C, and a 3.5mm headphone jack.

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி,25W சார்ஜிங் சப்போர்ட் 

இதிலுள்ள புதிய வாய்ஸ் ஃபோகஸ் அம்சம், மிக மோசமான சூழலில் கூட சுற்றுப்புறச் சத்தத்தைக் குறைக்க உதவுவதால் , நீங்கள் எப்பொழுதும் சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கப்படுவீர்கள் 

 சாம்சங் கேலக்ஸி F23 5G – 4 ஜிபி/128 ஜிபி மாடலின் விலை ரூ .17,499. 6 ஜிபி/128 ஜிபி மாடலின் விலை ரூ .18,499கிடைக்கும் . இவ்விரு மாடல்களும் Aqua Blue மற்றும் Forest Green  நிறங்களில் வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஃப்23 5ஜி வெளியீட்டு சலுகையாக  ஐசிஐசிஐ வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு  ரூ1,000 உடனடி கேஷ்பேக், அத்துடன் இரண்டு மாத YouTube பிரீமியம் சந்தா கிடைக்கும்.மேலும் ரூ. 4GB + 128GB மாடலின் அறிமுக விலை 15,999 மற்றும் ரூ. 6GB + 128GB மாடல்  16,999 கிடைக்கும் . அறிமுக விலை நிர்ணயம் எவ்வளவு காலம் இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

.