“வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! Trending News

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகும், சொன்னவுடன் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர்.

அது கவர்ச்சி நடிகை இருந்தாலும், கேரக்டராக இருந்தாலும், படத்தின் நாயகியாக இருந்தாலும், ரசிகர்களுக்கு கேரக்டரில் பாகுபாடு கிடையாது, அவர்கள் நடித்த கேரக்டர் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் நிச்சயமாக அவர்களை மறக்கப் போவதில்லை.

போக்கிரி படத்தில் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில், மிகப்பெரிய வெற்றிப்படமாக விஜய்க்கு அவரது சினிமா பயணத்தில் திருப்புமுனை படமாக அமைந்த படம் போக்கிரி. இந்த படத்தை நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா டைரக்ட் செய்திருந்தார்.

இந்த படத்தில் நடிகை அசின், விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. நாசர், ஸ்ரீமன், வையாபுரி, கராத்தே ராஜா, தாமு, பிரகாஷ்ராஜ், ஆனந்தராஜ் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது.

பிருந்தா பரேக்

இந்த படத்தில் நடித்தவர்தான் கிளாமர் ரோலில் நடித்தவர்தான் நடிகை பிருந்தா பரேக். வில்லன் பிரகாஷ்ராஜ் கேங்ஸ்டர் கூட்டத்தில், ஒரு ரவுடி பெண்ணாக அவரும் அந்த குரூப்பில் இருப்பார். அந்த படத்தில் அவரது கேரக்டர் பெயர் மோனா. இதில் ஒரு காட்சியில், அவரது தோள்பட்டையில் பிரகாஷ் அழுத்தமாக கிள்ளுவார். அப்போது அவர், ஆ என கத்த, வலிச்சாலும் தாங்கிக்கணும். கத்தக் கூடாது என்பார் கொடூர வில்லன் பிரகாஷ் ராஜ்.

என்ன செல்லப் பேரு ஆப்பிள்

இந்த படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் என்ற பாடல் காட்சியில், சிறப்பாக நடனம் ஆடி இருப்பார். இந்தப் படத்தில் அவரது கவர்ச்சியான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் பிருந்தா பரேக் நடித்திருக்கிறார்.

கடந்த 2004 ஆம் ஆண்டில், சிம்பு ஜோதிகா நடித்த மன்மதன் படத்தில் நடித்து பிருந்தா பரேக், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திருடிய இதயத்தை, சுதேசி, போக்கிரி, பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

பூனேவில் செட்டில்

அதன் பிறகு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிருந்தா பரேக் நடித்திருக்கிறார். அவர் சில்லுன்னு ஒரு சந்திப்பு என்ற 2013ம் ஆண்டில் விமல் ஓவியா நடிப்பில் வெளியான இந்த படத்தில் நடித்த பிறகு, திருமணமாகி பூனேவில் செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படியுங்கள்: நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!

நீச்சல் குளத்தில் குளியல்

இப்போது பிருந்தா பரேக் வயது 39 வயதாகிறது ஆனால் இந்த வயதிலும் தனது கட்டழகு, இளமை மாறாமல் அதே கிளாமர் தோற்றத்துடன் பிருந்தா பரேக் இருக்கிறார். அவர் பூனேவில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் குளித்த பிறகு, ஸ்டைலாக அமர்ந்து சூரியக் குளியல் எடுத்து ஓய்வெடுக்கும் புகைப்படங்கள், லேட்டஸ்ட் ஆக வெளிவந்து வைரலாகி வருகின்றன.

வலிச்சா கத்தக்கூடாது

இதை பார்க்கும் ரசிகர்கள் போக்கிரி படத்தில் நடித்த நடிகையாக இது என்று அசந்து போய் அவரது அழகை ரசித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” என்று பிரகாஷ் ராஜ் சொன்ன போக்கிரி பட நடிகை பிருந்தா பரேக், இப்பவும் இப்படி 39 வயதிலும் அசத்தலாக இருக்கிறாரே என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.