முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம்.. விஷால் சொன்னதை கேட்டீங்களா..? Trending News

நடிகர் விஷால் துவக்கத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர். குறிப்பாக சண்டக்கோழி, செல்லமே, துப்பறிவாளன், தாமிரபரணி, அவன் இவன் போன்ற படங்கள் அவரது நடிப்பில் மைல் கற்களாக அமைந்தன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, விஷால் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பல படங்கள் பெரிய அளவில் பிளாப் ஆனது. இதற்கிடையே நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாகவும் இருந்து பல சர்ச்சைகளிலும் நடிகர் விஷால் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.

விஷால்

கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி படம், விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால் இந்த படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடிப்பு வேற லெவலில் இருந்து படத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.

ரத்னம்

இந்த படத்தை தொடர்ந்து விஷால், ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இந்த படம், விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

வேட்பாளர் பட்டியலில் என் பெயர்…

இந்நிலையில் நேற்று முன்தினம், சென்னையில் செய்தியாளர்கள் சந்தித்த நடிகர் விஷால், 2026 ஆம் ஆண்டில் வேட்பாளர் பட்டியலில் என்னுடைய பெயர் இருக்கும், என்று கூறினார். அதாவது 2026 ஆம் ஆண்டில் அரசியல் கட்சியை தொடங்கி, நேரடியாக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், இப்போது நடிகர் விஷாலும், அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளது பலருக்கும் கேள்வியை எழுப்பிள்ளது.

இதையும் படியுங்கள்: “வலிச்சா கத்தக்கூடாது.. அமைதியா இருக்கணும்…” போக்கிரி பட நடிகை இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

நடிகர் விஜய் மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ஒரு படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவரது படங்கள் சுமாராக இருந்தாலும் கூட மாபெரும் வெற்றி படங்களாக ஓடிவிடுகின்றன.

ஆனால் விஷாலுக்கு, பல படங்கள் சரியாக ஓடாத நிலையில் இவர் அரசியல் கட்சி தொடங்கினால், யார் இவருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வரலட்சுமி சரத்குமார்

இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் குறித்து விஷால் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

ஏனெனில் ஒரு காலத்தில் நடிகர் விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வருகிறார்கள் என்ற கிசுகிசுக்கள் கிளம்பியது. நடிகர் சரத்குமாரை நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கிய விஷால் மீது கடுமையான கோபம் கொண்ட வரலட்சுமி, அவருடைய காதலை முறித்துக் கொண்டார் என்று கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்: நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…!

மெய் சிலிர்த்துப் போனேன்…

இந்நிலையில், தன்னுடைய முன்னாள் காதலி வரலட்சுமி திருமணம் குறித்து விஷால் கூறியுள்ளதாவது,

வரலட்சுமியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவருக்கு தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் அமைந்து வருகிறது. எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடிப்புக்கு பிறகு, அனுமன் படத்தில் வரலட்சுமி நடிப்பை நான் மிகவும் வியந்து ரசித்துப் பார்த்தேன். மெய்சிலித்துப் போனேன் அந்த அளவுக்கு உண்மையிலேயே மிகச் சிறப்பாக நடித்திருந்தார். அவரை நினைத்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

அடுத்த லெவலுக்கு…

அவருடைய கேரியர் தாண்டி அடுத்த லெவலுக்கு அவர் தன்னுடைய வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்து இருக்கிறார், என்று பாராட்டியிருக்கிறார் நடிகர் விஷால்.

மிக விரைவில் வரலட்சுமி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் 1ம் தேதி மும்பையில் நடந்தது. தனது முன்னாள் காதலி வரலட்சுமி குறித்து, மனம் திறந்து பாராட்டி பேசியுள்ளார் நடிகர் விஷால்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.