பல பெண்களுடன் தொடர்பு.. இனிமே என்ன மரியாதை.. தனுஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர் விளாசல்.. Trending News

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்த நிலையில், இரண்டு பிள்ளைகளுக்கு அப்பா அம்மாவாக உள்ளனர்.

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கடந்த 18 ஆண்டுகளாக அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் மனம் ஒத்துப் பிரிவதாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சினிமா ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனினும் கடன் கணவன் மனைவிக்குள் இதுபோன்ற கருத்து வேறுபாடுகள், பிரச்சனைகள் என்பதால் கூடிய விரைவில் பிரச்னைகள் தீர்ந்து விரைவில் இருவரும் மீண்டும் வாழ்க்கையில் இணைவார்கள் என்று தான் எதிர்பார்த்திருந்தனர்.

விவாகரத்து கேட்டு மனுதாக்கல்

ஆனால் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

அக்டோபர் 7ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நேற்று இந்த விவாகரத்து வழக்கை ஏற்றுக் கொண்ட குடும்ப நல நீதிமன்றம், வரும் அக்டோபர் 7ஆம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் மீது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல்வேறு குறைகளை கண்ட பிறகு இந்த ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. அதாவது தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் தனுஷ், மிக நெருக்கமாக பழகுவது ஐஸ்வர்யாவின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது.

நடிகைகளுடன் நெருக்கம்

குறிப்பாக நடிகைகள் அமலா பால், சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற சில நடிகைகளுடன் தனுஷ் அதிக நெருக்கம் காட்டி பழகியதாகவும், சிலருடன் இன்னும் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனை காரணமாக தனுஷ் மீது மிகவும் அதிருப்தி அடைந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து போய், அவரை விட்டு பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்: உச்ச கிளாமரில் ஜோதிகா.. உடல் எடை குறைச்சது இதுக்குத்தானா.. இளசுகளை இம்சை பண்ணும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

திரைப்பட தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

இப்போது திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் அதே விஷயத்தை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இதில் அவர், பல பெண்களுடன் தனுஷ் தொடர்பில் இருந்தார் என்பதை வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இதுவரை நாகரிகம் கருதி இதைப் பற்றி பேசாமல் இருந்ததாகவும், கோர்ட் வரைக்கும் சென்ற பிறகு, இதைப்பற்றி பேசாமல் இருப்பது சரியில்லை என்றும், அவர் குறிப்பிட்டு தனுஷ் மீது தனது குற்றச்சாட்டுகளை அடுக்கி இருக்கிறார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழ் பண்பாடு

இதுகுறித்து வீடியோ ஒன்றில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருப்பதாவது,
கேடு விளைவிக்க பார்க்கறியா தனுஷ்? அப்படி என்ன ஒரு வாழ்க்கை பல பெண்களுடன் உனக்கு? ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதுதான் தமிழ் பண்பாடு. நான் இதுவரைக்கும் நேரடியாக எதுவும் சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என் மனசு ஒத்துக்கவில்லை.

இதையும் படியுங்கள்: லாட்ஜ் எல்லாம் இல்லை.. வீட்டிலேயே அந்த செட்டப்.. கல்லா கட்டும் ட்ராயிங் நடிகை..!

என்ன நாகரிகம்?

கோர்ட் வரைக்கும் போயிட்ட பிறகு உங்ககிட்ட என்ன நாகரிகமாக பேசறது? தயவு செய்து தமிழ்நாடு, தமிழ் பண்பாடு, தமிழர்களுக்கு பிறந்தவர்கள் என்ற நல்ல மனசு உங்களுக்கு இருந்தால், அந்த பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், மக்களின் சாபத்தை பெறக்கூடாது என்றால் இருவரும் சேர்ந்து வாழுங்கள்.

குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்கள்

இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொடுங்கள். குழந்தைகளை காப்பாற்றி அவர்களுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்து, மகிழ்ச்சி வாழ வையுங்கள். வாழ்த்தி வாழுங்கள். அந்த குழந்தைகளும் வாழ்த்துவார்கள் என்று அந்த வீடியோவில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.