நைட் பார்ட்டி.. காதலனை கழட்டி விட்ட புன்னகையரசி.. ரகசியத்தை அம்பலப்படுத்திய பிரபல நடிகர்…! Trending News

சினிமா நடிகைகள் என்றாலே, அவர்கள் நடிக்கும் படங்களை பார்க்கும் ரசிகர்கள் மீது ரசிகர்கள் ஒரு நல்ல அபிமானத்தை வளர்த்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் பார்த்தால் அவர்களது அந்தரங்க வாழ்க்கை என்பது வெளிச்சத்துக்கு வந்து விடுகிறது.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு அல்லது நடிக்க வந்த பின்பு அவர்கள் நடந்து கொண்ட விதமும், அவர்கள் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களும் அவர்கள் மீதான அபிமானத்தை வெகுவாக குறைத்து விடுகிறது.

சினேகா

நடிகை சினேகா, தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று அழைக்கப்படும் ஒரு சிறந்த நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர். நடிகை கே ஆர் விஜயாவுக்கு பிறகு சிரிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு அழகியாக சினேகா இருப்பதால், புன்னகை அரசி என்ற பெயர் சூட்டப்பட்டது.

மலையாள திரைப்படத்தில் நடித்து, அதன் பிறகு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை சினேகா. ஆனந்தம், விரும்புகிறேன், உன்னை நினைத்து, வசூல்ராஜா எம்பிபிஎஸ், புன்னகை தேசம், வசீகரா என பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சினேகா.

விலைமாது கேரக்டரில்…

குறிப்பாக செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்த புதுப்பேட்டை படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்திருந்தார். இப்படி விலை மாது கேரக்டரில் நடித்திருந்தும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை சினேகா.

பிரசன்னாவுடன் திருமணம்

இந்நிலையில் அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற படத்தில் நடித்த போது, நடிகர் பிரசன்னாவை காதலித்து நடிகை சினேகா திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்ட நடிகை சினேகா, தனக்கு பிடித்தமான, குறிப்பிட்ட கேரக்டர்கள் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் வேலைக்காரன், பட்டாஸ் போன்ற படங்களில் நடித்த சினேகா, இப்போது நடிகர் விஜய் நடித்து வரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும், முன்னணி டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும், சினேகா கலந்து கொண்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: பல கோடி ருபாய் கடனில் தனுஷ்.. ரஜினி செய்த பெரிய துரோகம்.. உண்மைக்கு முரணான சான்றிதழ்கள்..

துவக்கத்தில் வரவேற்பு இல்லை

இந்நிலையில் நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் நடிகை சினேகா குறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டு, ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.

அந்த வீடியோவில் நடிகர் பயில்வான் நங்கநாதன் கூறியிருப்பதாவது,
நடிகை சினேகா மலையாள படத்தில் இருந்து, தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமாகி வந்தவர். சினேகா தமிழில் நடித்த சில படங்கள் ஆரம்பத்தில் சரியாக போகவில்லை. அதனால் சினேகாவுக்கு தமிழ் சினிமாவில், ஆரம்பத்தில் நடித்த படங்கள் மூலம், ரசிகர்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

நைட் பார்ட்டிகளுக்கு சென்றார்

இதையடுத்து நடிகை சினேகா, இரவு நேரங்களில் நிறைய நைட் பார்ட்டிகளுக்கு அடிக்கடி சென்றார். அதன்பிறகுதான் அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் அதிகரித்தது.

நாக் ரவியுடன் நிச்சயதார்த்தம்

நடிகை சினேகா, தெலுங்கு பட தயாரிப்பாளர் நாக் ரவி என்பவரை ஒரு காலகட்டத்தில் தீவிரமாக காதலித்தார். இருவருக்கும் திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தமும் நடந்தது. இருவரும் வைர மோதிரங்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் திருமணம் நடக்கவில்லை. நிச்சயதார்த்தத்தோடு நின்று விட்டது.

இதையும் படியுங்கள்: பல பெண்களுடன் தொடர்பு.. இனிமே என்ன மரியாதை.. தனுஷ் குறித்து பிரபல தயாரிப்பாளர் விளாசல்..

நடிகை சினேகா நாக் ரவி மீது சந்தேகப்பட்டதால், இந்த திருமணத்தை நிச்சயதார்த்தத்தோடு நிறுத்திவிட்டார் என்று, பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் பரபரப்பாக பேசியிருக்கிறார்.

காதலனை கழட்டி விட்டவர்

நைட் பார்ட்டிகளுக்கு சென்றவர், காதலனை கழட்டி விட்டவர் புன்னகையரசி என்று சினேகாவின் ரகசியத்தை அம்பலப்படுத்தி விட்டார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.